ஆடியோ கம்பெனி தொடங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்..!

Bookmark and Share

ஆடியோ கம்பெனி தொடங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்..!

சில வருடங்களுக்கு முன்பு ஆடியோ ரைட்ஸ் விற்பனை மூலமே இசையமைப்பாளர்களுக்கு சம்பளம் கொடுத்துவிடுவார்கள் தயாரிப்பாளர்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது.

ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் தவிர ஏனைய இசையமைப்பாளர்களான அனிருத், இமான், ஜி.வி.பிரகாஷ்குமார் உட்பட முன்னணி இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களின் ஆடியோ ரைட்ஸ் கூட சமீபகாலமாக விலைபோவதில்லை.

இன்னொரு பக்கம், முன்னணி ஆடியோ நிறுவனங்கள் ஏகப்பட்ட கண்டிஷன்களையும் போடுவதால் ஆடியோ ரைட்ஸை விற்க தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர். அதே நேரம் படத்தின் ஆடியோ சிடி மார்க்கெட்டுக்கு வரவில்லை என்றால் அது படத்துக்கு பலவீனமாகவும் இருக்கும். எனவே தயாரிப்பாளர்களே சொந்தமாக ஆடியோ கம்பெனி தொடங்கி தங்களின் படப்பாடல்களை வெளியிடத் தொடங்கிவிட்டனர்.

முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் க்ரீன் ஆடியோ என்ற கம்பெனியைத் தொடங்கி கொம்பன் ஆடியோவை வெளியிட்டது. இப்போது மற்றொரு முன்னணி தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ், தற்போது தேனாண்டாள் ஆடியோ என்ற கம்பெனியைத் தொடங்கி உள்ளது.

தேனாண்டாள் ஆடியோவின் மதல் வெளியீடாக காஞ்சனா - 2 பாடல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய்-63 படத்திற்கு கடும் போட்டி போடும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் - யார் தெரியுமா?
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் படமாகும் புனித தாமஸ் வரலாறு
விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்
தேனாண்டாள் நிறுவனத்தின் நாடக போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions