இறுதி கட்ட படப்பிடிப்பில் தெறி!

Bookmark and Share

இறுதி கட்ட படப்பிடிப்பில் தெறி!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டுருக்கும் தெறி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இப்படத்திற்காக சண்டைக்காட்சி ஒன்றை தொடர்ந்து 40 மணி நேரம் படமாக்கினார்கள். பின்னி மில்லில் தொழிற்சாலை செட் அமைத்து இந்த சண்டைக்காட்சியை படமாக்கினார்கள். 

கிறிஸ்துமஸ், புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக விஜய் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். எனவே தெறி படத்தின் படப்பிடிப்புக்கு தற்காலிக பிரேக் கொடுத்திருக்கிறார்கள்.  மீண்டும் ஜனவரி 3 ஆம் தேதி தெறி படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. 

கடைசிகட்ட படப்பிடிப்பை பிரேக் இல்லாமல் தொடர்ச்சியாக 3 வாரங்கள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறாராம் அட்லி. ஜனவரி கடைசி வாரம் படப்பிடிப்பை முடித்த கையோடு பிப்ரவரியில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துவங்குகிறார்.

தெறி படத்தின் பாடல்களை மார்ச் மாதத்தில் வெளியிட்டுவிட்டு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி தெறி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் தாணு.

 


Post your comment





Related News
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
சோப்பு விளம்பரம், தெறி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது? - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions