தெறி படத்தில் இணைந்த வெற்றி கூட்டணி

Bookmark and Share

தெறி படத்தில் இணைந்த வெற்றி கூட்டணி

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 

‘தெறி’ படத்துக்காக ஜி.வி. இசையில் விஜய் இரண்டு பாடல்களை பாடியுள்ளார். மேலும், உத்ரா உன்னிகிருஷ்ணன் ஒரு பாடலும், அறிமுக பாடலை தேவாவும் பாடியுள்ளனர். 

இந்நிலையில், இப்படத்தில் ஒரு பாடலை பின்னணி பாடகர் ஹரிஹரனும் பாடியுள்ளாராம். விஜய்-ஹரிஹரன் கூட்டணியில் ஏற்கெனவே ‘நெஞ்சினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘மனசே மனசே’, ‘குஷி’ யில் ‘மொட்டு ஒன்று மலர்ந்திட துடிக்கும்’, ‘உதயா’ படத்தில் ‘உதயா உதயா’, ‘துப்பாக்கி’ படத்தில் ‘குட்டிப்புலி கூட்டம்’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

அந்த வரிசையில் இந்த பாடலும் ஹிட் வரிசையில் அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

‘தெறி’ படத்தின் ஆடியோ மார்ச் 10-ந் தேதியையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். அட்லி இயக்கியுள்ளார். 

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இந்த டீசரை 5 நாட்களுக்குள் 60 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். ஏப்ரல் 14-ந் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்
தளபதி என நிரூபித்த விஜய்! ரசிகைகள் கொண்டாட்டம்
தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2
இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்? இது தான் காரணம்
தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க ஐ யம் வெயிட்டிங் - பிரபல நடிகர் அதிரடி
தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions