முன்பதிவில் சாதனை படைத்த தெறி!

Bookmark and Share

முன்பதிவில் சாதனை படைத்த தெறி!

விஜய் நடித்துள்ள ‘தெறி’ படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தை வரவேற்க உலகம் முழுவதிலும் உள்ள விஜய் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று இரவு முதல் இப்படத்தின் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சென்னையில் ‘தெறி’ படம் திரையிடப்படும் திரையரங்குகளில் உள்ள டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதில் குறிப்பிடும்படியாக, சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகளில் மட்டும் முதல்நாளில் 104 காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 104 காட்சிகளுக்குமான டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது. 

இதுதவிர, வெளிநாடுகளிலும் விஜய்க்கு மவுசு இருப்பதால் அங்கேயும் ‘தெறி’ முன்பதிவு டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன. விஜய் பட வரிசையிலேயே இப்படம் மிகப்பெரிய வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மட்டும் இப்படம் ரூ.50 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். 


Post your comment





Related News
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்
தளபதி என நிரூபித்த விஜய்! ரசிகைகள் கொண்டாட்டம்
தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2
இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்? இது தான் காரணம்
தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க ஐ யம் வெயிட்டிங் - பிரபல நடிகர் அதிரடி
தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions