தெறி 100-வது நாள் கொண்டாட்டம்!

Bookmark and Share

தெறி 100-வது நாள் கொண்டாட்டம்!

விஜய் நடிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகி, உலகெங்கிலும் சூப்பர் ஹிட்டான படம் ‘தெறி’. இப்படத்தை அட்லி இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். இப்படம் வெளிவந்து இந்த மாதம் ஜுலை 22-ந் தேதியோடு 100 நாளை தொடுகிறது. 

விஜய் படங்களின் 100-வது நாளை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்த முறை ‘தெறி’ 100-வது நாளின் போது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் திரையிடப்படுவதால், ‘தெறி’ 100-வது நாள் கொண்டாட்டத்தை திரையரங்கில் கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அதற்கு முன்னதாகவே ‘தெறி’ படத்தின் 100-வது தினத்தை சிறப்பாக கொண்டாட விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.  விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் நாளை ஞாயிறு (ஜுலை 17) அன்று சென்னையில் ஆல்பர்ட் திரையரங்கில் ‘தெறி’ படத்தின் இரண்டு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளன. 

இந்த திரையரங்கில் விஜய் ரசிகர்கள் ‘தெறி’ படத்தின் 100-வது நாளை சிறப்பாக கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிது. இதுமட்டுமில்லாமல் சென்னை ஈசிஆர் ரோட்டில் அமைந்துள்ள பிரார்த்தனா டிரைவ் இன் திரையரங்கம் மற்றும் ஆராதனா திரையரங்கமும் ‘தெறி’ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


Post your comment





Related News
மீண்டும் வெளியாகும் தெறி!
200 கோடி வசூல் செய்ததா தெறி? – வெளிவந்த உண்மை!
சர்ச்சையை ஏற்படுத்திய தெறி விளம்பர வாசகம்!
தெறி படத்தின் மிரள வைக்கும் 25 நாள் வசூல் விவரம்!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
ஐரோப்பியாவிலும் வசூல் வேட்டை நடத்திய தெறி!
மிரள வைக்கும் தெறியின் முதல் வார தமிழக வசூல் விவரம்!
விஜய்யின் தெறி சிக்கலால் சசிகுமார் படத்துக்கும் பாதிப்பு?
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்சில் வசூல் வேட்டை நடத்திய தெறி ?
தெறி சக்ஸஸ் பார்ட்டியில் கலந்துகொண்ட விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions