தெறி விழாவில் விஜய் பேசியது என்ன?

Bookmark and Share

தெறி விழாவில் விஜய் பேசியது என்ன?

‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சின்ன சின்ன பன்ச்களுடன் மிக சுவாரஸ்யமாக பேசினார். அதன் தொகுப்பு இங்கே:

“பொதுவா ஆடியோ விழாவில் இசையமைப்பாளர் தான் ஹீரோ. ஆனா எனக்கு ஹீரோ தான் இசையமைப்பாளரே. விர்ஜின் பசங்களின் தலைவர் ஜி.வி.பிரகாஷ்”

“இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் செல்பி புள்ள, இன்னொருவர் குல்பி புள்ள”

“இயக்குனர் அட்லியின் வெறி தான் இந்த தெறி”

“ஒரு தோல்விக்கு 1000 காரணம் இருக்கலாம். ஆனால் ஒரு வெற்றிக்கு அந்த 1000 தோல்விகள் தான் காரணமாக இருக்க முடியும்”

“எனது ரசிகர்களும் அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய உயரத்தை அடையவேண்டும்”

“இன்னொருவர் வெற்றியை இலக்காக வைக்காதீர்கள். உங்கள் வெற்றியை இன்னொருவர் இலக்காக வைக்கும்படி செய்யுங்கள்”

“எனக்கு என் படத்தை பற்றி பெருமையாக பேசி பழக்கம் இல்லை. அதனால்தான் பொதுவாக பேசுகிறேன். போர் அடிச்சா மன்னிச்சுக்கோங்க, ஸ்பார்க் கிடைச்சா எடுத்துக்கோங்க. ஃப்ரீ அட்வைஸ்”

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions