சும்மா 'தெறி'க்க விட்ட விஜய் ரசிகர்கள்

Bookmark and Share

சும்மா 'தெறி'க்க விட்ட விஜய் ரசிகர்கள்

விஜய் நடிக்கும் 59-வது படத்துக்கு, 'தெறி' என்று பெயர் வைக்கபப்ட்டுள்ளது. இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்க, அட்லி இயக்கி வருகிறார். படத்துக்கு பெயர் சூட்டப்படாமல், படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது.

கார்த்திகை தீபமான நேற்று இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. படத்துக்கு, 'தெறி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன், சுனைனா ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

நடிகை மீனாவின் மகள் நைனிகா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிறார். படப்பிடிப்பு சென்னை மற்றும் கோவாவில் நடைபெற்றது. பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.

தெறி என்றால் தெறித்தல் என்று அர்த்தம். 'தெறிச்சு ஓடணும்டா' என்று பேச்சு வழக்கில் பயன்படுத்துவார்கள்.

அஜீத் தனது வேதாளம் படத்தில் 'தெறிக்க விடலாமா' என வசனம் பேசி இருப்பார். இதை வைத்து அஜீத்தின் பட விளம்பரங்களில் 'தெறி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தனர்.

இப்போது விஜய் தன் படத்துக்கு தெறி என்று தலைப்பிட்டுள்ளார். தலைப்பும், படத்தின் டைட்டில் வடிவமைப்பும் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

ஃபஸ்ட் லுக் வெளியான சில நிமிடங்களிலேயே ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர் ரசிகர்கள்.

மேலும் ஃபஸ்ட் லுக் வெளியான பதினைந்து நிமிடத்திலேயே மதுரை மற்றும் நெல்லையை சேர்ந்த நடிகர்கள் பேனர் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 


Post your comment





Related News
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்
தளபதி என நிரூபித்த விஜய்! ரசிகைகள் கொண்டாட்டம்
தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2
இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்? இது தான் காரணம்
தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க ஐ யம் வெயிட்டிங் - பிரபல நடிகர் அதிரடி
தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions