”தெறி” டைட்டில் கெட்டவார்த்தையா?

Bookmark and Share

”தெறி”  டைட்டில் கெட்டவார்த்தையா?

விஜய்யின் 59வது படம் ‘தெறி’ தலைப்பிலேயே மலையாள சினிமா மக்களை கொஞ்சம் வருத்தமடையச் செய்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிவரும் படம் ’தெறி’ இப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று முன் தினம் மாலை வெளியாகி ஹிட்டானது. விஜய்யின் ரசிகர்கள் தெறி என இந்திய அளவில் ட்ரெண்ட் உருவாக்கி கொண்டாடினர்.

’தெறி என்பது மலையாளத்தில் கெட்டவார்த்தை எனப் பொருள் படுமாம். விஜய்க்கென தனி ரசிகர்கள் கேரளாவில் உள்ள நிலையில் ‘தெறி’ தலைப்பு அவர்களை கொஞ்சம் சங்கடமாக்கியுள்ளது என்றே கூறவேண்டும்.

கெட்டவார்த்தை என ஒரு படத்துக்குப் பெயரா என்ற ரீதியில் தற்போது அங்கே சலசலப்பும் உருவாகியுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions