தில்லுமுல்லு மாதிரியான காமெடி படத்தில் நடிக்கும் ரஜினி

Bookmark and Share

தில்லுமுல்லு மாதிரியான காமெடி படத்தில் நடிக்கும் ரஜினி

ரஜினி முழு நீள காமெடி படத்தில் நடிக்கிறார். இதற்கான கதை தேர்வு நடக்கிறது. ஏற்கெனவே ரஜினி நடித்த காமெடி படங்கள் வெற்றிகரமாக ஓடின. வசூல் சாதனையும் படைத்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படங்களாகவும் இருந்தன.

குறிப்பாக ‘தில்லுமுல்லு’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘குரு சிஷ்யன்’ உள்ளிட்ட காமெடி படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றன. அந்த படங்கள் சாயலில் காமெடி படம் ஒன்றில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளார்.

சமீபத்திய அவரது படங்கள் அனைத்தும் ‘சீரியஸ்’ கதையம்சம் உள்ள படங்களாகவே இருந்தன. ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘கோச்சடையான்’ என ஆக்ஷன் படங்களில் நடித்தார். ‘லிங்கா’வும் ஆக்ஷன் படமாகவே இருந்தது. எனவே இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களை கொஞ்ச காலம் ஒதுக்கி வைத்து விட்டு காமெடி படங்களில் நடிக்க தயாராகிறார்.

காமெடி கதைகள் எழுதி பிரபலமான கிரேசிமோகனை சில தினங்களுக்கு முன்பு ரஜினி சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. காமெடி படத்தில் இணைந்து பணியாற்றுவது குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினி நடித்த ‘அருணாச்சலம்’ படத்துக்கு கிரேசிமோகன்தான் திரைக்கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. காமெடி படங்கள் எடுக்கும் டைரக்டர்களில் ஒருவர் ரஜினியின் புதுப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
நெற்றியை விட மூக்கு நீளமாக இருக்கிறவர்கள் முட்டாளாக இருப்பார்கள்! - டைரக்டர் பத்ரி கலகல பேச்சு
\'தில்லுமுல்லு\' படத்தால் 6 கோடி இழப்பு... பட நிறுவனம் தவிப்பு.
தில்லு முல்லை தடைசெய்யவேண்டும்: இயக்குநர் விசு வழக்கு.
\'தில்லு முல்லு\' படத்துக்கு கிளீன் \'யு\' சான்றிதழ்.
ரஜினியின் ஆவலைத்தூண்டும் தில்லுமுல்லு.
யுவனுடன் இணந்து ஆடிப்பாடிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி!
நகைச்சுவையாகத்தானே பேசினேன் மன்னிச்சுருங்க பார்த்திபன்!
தில்லு முல்லு பட சர்ச்சையில் மாட்டிக்கொண்ட நடிகர் சிவா!
தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்வதை எதிர்த்து வக்கில் நோட்டிஸ்!
ரஜினி வேடத்தில் சிவா பொருந்துமா? தில்லு முல்லு ரீமேக்கில்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions