திரு இயக்கத்தில் நடிக்கும் ஜெய்

Bookmark and Share

திரு இயக்கத்தில் நடிக்கும் ஜெய்

ஜெய், திரு இயக்கத்திலான படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.

இதுகுறித்து, இயக்குநர் திரு கூறியதாவது, என்னுடைய சினிமா கேரியரில், இது முக்கியமான படம் ஆகும். இதில் என்னுடைய வழக்கமான டீம் ஆன இசையமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், எடிட்டர் ரூபேன், கலை இயக்குநர் ஜாக்கி மற்றும் காஸ்டியூம் டிசைனர் நிரஞ்சனி பணிபுரிய உள்ளனர்.

படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு, சென்னை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் நடைபெற உள்ளது. படப்பிடிப்பு, மார்ச் மாதம் துவங்க உள்ளது. கதாநாயகி தேர்வு நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

விஷால் நடிப்பில், தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் திரு என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions