குலதெய்வம் சீரியலில் மெட்டிஒலி திருமுருகன் நடிக்கவில்லை!

Bookmark and Share

குலதெய்வம் சீரியலில் மெட்டிஒலி திருமுருகன் நடிக்கவில்லை!

மெட்டி ஒலி மெகா தொடரை இயக்கி அதில் ஒரு கேரக்டரிலும் நடித்தவர் திருமுருகன். அதையடுத்து, தேனிலவு, நாதஸ்வரம் ஆகிய தொடர்களை இயக்கி நடித்தவர், தற்போது குலதெய்வம் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.

மேலும், பரத்தை நாயகனாக வைத்து எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய படங்களையும் இயக்கினார். பின்னர் மீண்டும் டிவிக்கே திரும்பி விட்ட திருமுருகன், தற்போது குலதெய்வம் சீரியலை இயக்கி வருகிறார்.

தான் இயக்கும் எல்லா சீரியல்களிலுமே திருமுருகனும் ஒரு கேரக்டரில் நடித்து வந்ததால், தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலிலும் அவர் ஒரு கேரக்டரில் எப்படியும் நடிப்பார் என்றுதான் நேயர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்த குலதெய்வம் தொடரில் திருமுருகன் நடிக்கவில்லையாம். தான் நடிக்க உருவாக்கியிருந்த ஒரு கேரக்டரில்கூட வேறொரு நடிகரை நடிக்க வைத்திருக்கிறாராம். காரணம், அடுத்தபடியாக அவர் ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

சீரியல் வேலைகள் நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சீரியலில் நடிப்பதிலும் கவனம் செலுத்தினால் படம் இயக்க சிரமம் ஏற்படும் என்பதால் இந்த குலதெய்வம் சீரியலில் அவர் நடிக்கவில்லையாம். மேலும், தனது 3வது படத்தில் நடிக்க சில இளவட்ட ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வருகிறார் திருமுருகன்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions