படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் நடிகையானார்

Bookmark and Share

படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் நடிகையானார்

திருமுருகன் தற்போது குலதெய்வம் என்ற தொடரை இயக்கி வருகிறார். இதில் திருமுருகன் இதற்கு முன் இயக்கிய நாதஸ்வரம் தொடரில் நடித்த பலர் நடிக்கிறார்கள்.

சில புதுமுகங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஐஸ்வர்யா. இவர் நாதஸ்வரம் ஷூட்டிங் பார்க்க வந்து அதன் மூலம் நடிகையானவர்.

நாதஸ்வரம் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த கீதாஞ்சலி ஐஸ்வர்யாவின் அக்கா. அவர் நடிப்பதை சனி, ஞாயிறு பள்ளி விடுமுறையில் பார்க்க வந்துவிடுவார் ஐஸ்வர்யா.

அப்போது யூனிட்டில் உள்ள எல்லோருக்குமே அறிமுகமானார். ஐஸ்வர்யாவின் சுறுசுறுப்பும், அழகும் பிடித்துப்போன இயக்குனர் திருமுருகன் அடுத்த தொடரில் உன்னை நடிக்க வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். 

அதன்படி குலதெய்வம் தொடரில் மவுலியின் பேத்தியாக நடிக்கிறார். கதையில் 8ம் வகுப்பு மாணவியாக நடிக்கும் ஐஸ்வர்யா நிஜத்தில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். படித்துக் கொண்டே தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions