திருட்டு கல்யாணத்தை ஆதரிக்கும் படமா? இயக்குனர் பதில்

Bookmark and Share

திருட்டு கல்யாணத்தை ஆதரிக்கும் படமா? இயக்குனர் பதில்

கே.பாக்யராஜ், சசி ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ஷக்திவேலன் தனியாக இயக்கி இருக்கும் படம் திருட்டு கல்யாணம். இதில் ரங்கயாழி, தேஜஸ்வி என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஆடுகளம் நரேன், தம்பி ராமைய்யா, பசங்க செந்தி, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

ரத்னவேலு உதவியாளர் கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார், வைத்தி இசை அமைத்துள்ளார். இது திருட்டு கல்யாணத்தை ஆதரிக்கிற படமா என்ற கேள்விக்கு இயக்குனர் ஷக்திவேலன் அளித்த பதில் வருமாறு: திருட்டு கல்யாணம் என்பதை இந்த சமூகம் கடுமையான குற்றமாக பார்க்கிறது.

திருட்டு கல்யாணம் என்பது மற்றவர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் தனியாக சென்று திருமணம் செய்து கொள்வதுதான். மற்றவர்களை அழைத்து திருமணம் நடத்துவதா நாமே திருமணம் செய்து கொள்வதா என்பது திருமணம் செய்பவர்களின் உரிமை.

இது எப்படி குற்றமாகும். என்றாலும் நான் இதில் திருட்டு கல்யாணம் தவறு என்றுதான் சொல்கிறேன். திருட்டு கல்யாணம் செய்து கொண்டு ஊரைவிட்டு ஓடியே ஹீரோவும், ஹீரோயினும் மனமொத்து சந்தோஷமாக வாழ்ந்து உயர்கிறார்கள்.

எல்லோரும் ஒன்றாக இருந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்த ஒரு தம்பதிகள் கருத்தொற்றுமை இல்லாமல் சண்டைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். இரண்டையும் காட்டி ஏன் இந்த முரண்பாடு என்பதை சொல்கிறேன்.

திருமணம் என்பது சடங்குகளில் இல்லை. வாழும் வாழ்க்கையில் இருக்கிறது என்பதை சொல்கிறேன். என் குரு பாக்யராஜின் திரைக்கதை பாணியிலும். இன்னொரு குரு சசியின் மேக்கிங் ஸ்டைலிலும் இதனை உருவாக்கி இருக்கிறேன். என்றார் ஷக்திவேலன்.


Post your comment





Related News
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்
கல்யாணம் முதல் காதல் வரை நாயகி பிரியாவிற்கு என்ன ஆனது- பேஸ்புக்கால் சர்ச்சை
திருட்டு பயலே இரண்டாம் பாகத்திற்கு இசையமைக்கும் மெலடி கிங்
இனி ‘கல்யாணம் முதல் காதல் வரை’யில் ப்ரியா வரமாட்டார் – ரசிகர்கள் அதிர்ச்சி!
திருட்டுப்பயலே 2-வில் இணைந்த இரண்டு முன்னணி காமெடியன்கள்!
உதயநிதி குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ!
திருட்டு விசிடி எப்படி வருது தெரியுமா? இதோ இந்த வழியாத்தான்!
நடிகர் சங்க செயற்குழு 28–ந்தேதி கூடுகிறது: திருட்டு வி.சி.டியை தடுப்பது பற்றி ஆலோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions