திருட்டு விசிடி தயாரித்த 7 சினிமா தியேட்டர்கள்: போலீஸ் அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

திருட்டு விசிடி தயாரித்த 7 சினிமா தியேட்டர்கள்: போலீஸ் அதிர்ச்சி தகவல்

திருட்டு விசிடியால் திரையுலகமே அழிகிறது என்று திரையுலகினர் அழுது கண்ணீர் வடிக்கிறார்கள். ஆர்பாட்டம் செய்கிறார்கள், ஆவேச குரல் எழுப்புகிறார்கள். ஆனால் திருட்டு விசிடியை தயாரிப்பதே அதே சினிமா உலகைச் சேர்ந்த தியேட்டர்கள்தான்.

அந்த தியேட்டரை நோக்கி யாரும் குரல் கொடுப்பதில்லை. காரணம் தங்கள் படத்துக்கு ரெட் போட்டுவிடுவார்களோ என்கிற பயம்தான். இப்போது திருட்டு விசிடியை தயாரிப்பது தியேட்டர்கள்தான் என்கிற அதிர்ச்சி தகவலை போலீஸ் வெளியிட்டுள்ளது.

திருட்டு விசிடி தடுப்பு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த ஆண்டு நவீன கேமராக்களை கொண்டு திருட்டு விசிடி தயாரித்த 7 தியேட்டர்கள் பிடிபட்டது. அந்த தியேட்டர்களை மூடுமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

5 ஆயிரத்து 875 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுப்படங்களை ஒளிபரப்பிய 28 கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக 390 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டு விசிடியை ஒழிக்க  புதிய தொழில்நுட்பம் ஒன்று அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
திருட்டு பயலே இரண்டாம் பாகத்திற்கு இசையமைக்கும் மெலடி கிங்
திருட்டுப்பயலே 2-வில் இணைந்த இரண்டு முன்னணி காமெடியன்கள்!
உதயநிதி குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ!
திருட்டு கல்யாணத்தை ஆதரிக்கும் படமா? இயக்குனர் பதில்
திருட்டு விசிடி எப்படி வருது தெரியுமா? இதோ இந்த வழியாத்தான்!
நடிகர் சங்க செயற்குழு 28–ந்தேதி கூடுகிறது: திருட்டு வி.சி.டியை தடுப்பது பற்றி ஆலோசனை
அஜீத் படத்தின் திருட்டு சி.டி.க்கள் விற்பனை: பட அதிபர்கள் போலீசில் புகார்
படம் ரிலீஸுக்கு முன்பே ’ஐ’படத்தின் திருட்டு விசிடி
லிங்கா திருட்டு சி.டி.க்காக வேனை பறிமுதல் செய்த போலீஸார்
அரசு அனுமதி மறுப்பு: திருட்டு விசிடிக்கு எதிரான பேரணி, ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் ரத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions