செப்டம்பர் 4-ல் தூங்காவனம் டிரைலர்

Bookmark and Share

செப்டம்பர் 4-ல் தூங்காவனம் டிரைலர்

‘பாபநாசம்’ படத்திற்குப் பிறகு கமல் ‘தூங்காவனம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுக்கு ஜோடியாக திரிஷா மற்றும் பிரகாஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்குகிறார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது சைக்கோ திரில்லர் கதையாக தெரிகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை செப்டம்பர் 4ம் தேதி வெளியிட இருக்கின்றனர். மீண்டும் கமல்-திரிஷா கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions