கமலின், தூங்காவனம் ஆங்கில படத்தின் ரீமேக்.?!

Bookmark and Share

கமலின், தூங்காவனம் ஆங்கில படத்தின் ரீமேக்.?!

கமல் நடித்துள்ள பாபாநாசம் இன்று வெளியாகி உள்ளது. இது த்ரிஷ்யம் என்ற மலையாளப்படத்தின் ரீமேக். அதே போல கமல் அடுத்து நடிக்க இருக்கும் தூங்காவனம், ஸ்லீப்லெஸ் நைட் (தூங்காத இரவு) என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கமலின் விக்ரம் படம் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக். மிஸ்சஸ்.

டவுட்பயர் என்ற படத்தைத்தான் அவ்வை சண்முகியாக ரீமேக் செய்தார் கமல். ஆனால் முறைப்படி ரீமேக் உரிமம் பெற்று செய்வது கமலின் வழக்கம். அந்த வகையில் தூங்காவனமும் ஸ்லீப்லெஸ் நைட்டின் ரீமேக் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

2011ம் ஆண்டு வெளிவந்த பிரெஞ்சு படம் ஸ்லீப்லெஸ் நைட். தாமர் சிஸ்லே ஹீரோவாக நடித்தார். ஜூலின் போய்ஸ்லர் ஹீரோயின். பெரட்ரிக் ஜார்டின் இயக்கி இருந்தார். இது ஒண்ணறை மணி நேரம் ஓடும் ஆக்ஷன் த்ரில்லர் படம்.

படத்தின் ஹீரோ தாமர் சிஸ்லே ஒரு போலீஸ் அதிகாரி. அவர் ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலை துரத்தும்போது அவர்களிடமிருந்து ஒரே ஒரு போதை பொருள் பார்சலை கைப்பற்றுகிறார். கும்பல் தப்பி ஓடுகிறது.

அந்த பார்சல் ஒரு இரவு கிளப்பின் உரிமையாளருக்கு போய் சேர வேண்டியது. பல கோடி மதிப்புள்ளது. அந்த கிளப்பின் உரிமையாளர் ஹீரோவின் மகளை கடத்தி தன் கிளப்பில் வைத்துக் கொண்டு போலீஸ் அதிகாரியை மிரட்டுகிறார். "காலை சூரியன் உதிப்பதற்குள் அந்த பார்சலை கொடுத்து விட்டு மகளை மீட்டுச் செல்" என்கிறார்.

ஆனால் பார்சலை கொடுக்க விரும்பாத போலீஸ் அதிகாரி. விடிய விடிய கூத்தும் கும்மாளமுமாக இருக்கும் அந்த கிளப்புக்குள் புகுந்து கடும் பாதுகாப்பையும் மீறி தன் மகளை சூரியன் உதிப்பதற்குள் எப்படி மீட்கிறார்.

அந்த கும்பலை எப்படி பிடிக்கிறார் என்பதுதான் கதை. இதில் ஹைலைட்டான விஷயம் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தாமர் சிஸ்லேவேனின் படு ஸ்டைலான நடிப்பு. அந்த கேரக்டரில்தான் கமல் நடிக்கிறார். அந்த கிளப்பின் நடன பெண்ணாக ஜூலின் நடித்திருந்தார். அந்த கேரக்டரில் த்ரிஷா நடிக்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions