தூங்காவனம் மற்றும் வேதாளம்..வெளிவந்த சென்சார் ரிப்போர்ட்!

Bookmark and Share

தூங்காவனம் மற்றும் வேதாளம்..வெளிவந்த சென்சார் ரிப்போர்ட்!

பண்டிகை நாட்களில் பெரிய பட்ஜெட் படங்களை திரையிடுவது என்றும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களுக்கு வழிவிட வேண்டும் என்றும் பட அதிபர்கள் சங்கம் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

அதன்படி தீபாவளிக்கு என்னென்ன பெரிய படங்கள் வரும் என்று ரசிகர்கள் பரபரப்பாக எதிர்பார்த்தார்கள். இந்த நிலையில் கமல்ஹாசனின் ‘தூங்காவனம்,’ அஜித்குமாரின் ‘வேதாளம்’ ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

‘தூங்காவனம்’ படத்தில் கமல்ஹாசன்-திரிஷா ஜோடியாக நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ், கிஷோர், ஆஷாசரத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இப்படம் சென்ஸார் சென்று 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது. 

‘வேதாளம்’ படத்தில் அஜித்குமார்-சுருதிஹாசன் ஜோடியாக நடித்துள்ளனர். அஜித்குமார் தங்கை வேடத்தில் லட்சுமிமேனன் வருகிறார்.

வீரம்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்-சிவா இணைந்துள்ளதால் வேதாளம் படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் 'யு' சான்றிதழ் பெற்றுள்ளது. இந்நிலையில் இவ்விரண்டு படங்களைப் பற்றியும் சென்சார் ரிப்போர்ட்டில் கூறிய தகவல் கசிந்துள்ளது.

தூங்காவனம் :

‘தூங்காவனம்’ திரைப்படத்தின் ஒரிஜினல் பார்த்தேன். பரபரப்பு, ஆக்‌ஷன், சஸ்பென்ஸ், கமல், பிரகாஷ்ராஜ், திரிஷா, சம்பத், கிஷோர் ஆகியோரது நடிப்பு மற்றும் அளவான இரண்டு மணி நேர திரைப்படம் என பல பிளஸ் பாயிண்டுகள் இருந்தாலும், போதைப் பொருள் கடத்தும் கும்பல்..

அதனை பிடிக்கும் ரகசிய போலீஸ்…. இதற்கிடையே அந்த போலீஸ் நாயகனின் குடும்பம் படும் அவஸ்தை.. நாயகன் போலீஸ் எனத் தெரியாமல் அவனைப் பிடிக்க நினைக்கும் பெண் போலீஸ்… எக்கச்சக்க துப்பாக்கி சத்தம் ..

நைட் கிளப் சூழலில் நடக்கும் பரபரப்பு … கிச்சுக்கிச்சு காட்டும் சார்ம்ஸ் என சற்று அதிகமாகவே உள்ளது என்று கூறியுள்ளனர். 

வேதாளம் பற்றி சென்ஸார் கூறியது:

நீளம் சற்று அதிகம் தான். லட்சுமி மேனன் வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் படம் நிமிர்ந்து நிற்கிறது, வழக்கமான மசாலா காட்சிகளில் இருந்து வேறுபடுகிறது என்று கூறியுள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions