14 கோடி மக்களை மகிழ்விக்கும் இந்த தூங்காவனம் - கமல் பேச்சு!

Bookmark and Share

14 கோடி மக்களை மகிழ்விக்கும் இந்த தூங்காவனம் - கமல் பேச்சு!

கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று(செப்., 16ம் தேதி) மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. தூங்காவனம் படத்தின் டிரைலரை கமல் ஆன்லைன் மூலம் வெளியிட்டார். 

பின்னர் தூங்காவனம் படத்தில் நடித்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அறிமுகம் செய்தார். இவ்விழாவில் கவுதமி, த்ரிஷா மற்றும் படக்குழுவினர் கலந்துக்கொண்டுள்ளனர்.

விழாவில் கமல் பேசும்போது, “ஒரேநேரத்தில் இதுவரை இரண்டு மொழிகளில் 24 படங்களில் நடித்துள்ளேன். இரண்டு மாநிலங்களிலும்(தமிழ்நாடு - ஆந்திரா) சேர்த்து சுமார் 14 கோடி மக்கள் இருக்கிறார்கள்.

இரண்டு மாநில மக்களையும் மகிழ்விக்கும் படமாக இந்த தூங்காவனம் படம் இருக்கும். தூங்காவனம் படத்திற்கு பிறகு இனி ராஜ்கமலின் வேகம் இன்னும் அதிகரிக்கும்.

எங்களது அடுத்தபடத்திற்கான லொகேஷன் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் முடிவாகிவிட்டது என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்” என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions