மூன்று ஹீரோயின்களுடன், 'தூங்கா வனம்' செல்லும் கமல்.?!

Bookmark and Share

மூன்று ஹீரோயின்களுடன், 'தூங்கா வனம்' செல்லும் கமல்.?!

கமல்ஹாசன் நடிப்பில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ’உத்தம வில்லன்’. இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக பாபநாசம், விஸ்வரூபம்-2 என அடுத்தடுத்து படங்கள் வெளிவர இருக்கின்றன.

இந்நிலையில் இந்தபடங்களுக்கு அடுத்தப்படியாக ஒரு படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் கமல். இந்தப்படத்திற்கு ’ஓர் இரவு’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

அதேசமயம் த்ரிஷா, கமலுடன் மீண்டும் நடிக்கிறார் என்பது மட்டும் உறுதியானது. மேலும் கமல் படத்திற்காக செல்வராகவன் படத்தை த்ரிஷா வேண்டாம் என்று சொன்னதாக கூட செய்திகள் வெளிவந்தன. சரி விடுங்க இதெல்லாம் பழைய கதை.

இப்போது விஷயம் என்னவென்றால் இப்படத்தின் தலைப்பு ஓர் இரவு கிடையாதாம். ’தூங்கா வனம்’ தான் படத்தின் தலைப்பு என்கிறார்கள். சமீபத்தில் இந்த தலைப்பை கமல் தரப்பில் பதிவு செய்திருக்கிறார்.

ஆக கமலின் அடுத்த பட தலைப்பு தூங்கா வனமாக இருக்கலாம் என்கிறார்கள். கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கும் இப்படம் ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாக இருக்கிறது.

அதோடு இப்படத்தில் கமலுடன் மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்களாம். ஒருவர் த்ரிஷா, ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டார். இப்போது புதிதாக மனீஷா கொய்ராலாவும், காவியத்தலைவன் பட நாயகி அனைகா சோதியும் நடிக்க இருக்கிறார்களாம்.

இவர்களோடு பிரகாஷ் ராஜூம் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பு வெளியாக இருக்கிறது.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions