'தூங்காவனம்' பர்ஸ்ட் லுக் : கமல் வெளியிட்டார்

Bookmark and Share

'தூங்காவனம்' பர்ஸ்ட் லுக் : கமல் வெளியிட்டார்

கமல்ஹாசன் அடுத்து அவருடைய சொந்தத் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்கும் 'தூங்காவனம்' படத்தின் முதல் பார்வையை ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளதாலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் ஆரம்பமாவதாலும் தெலுங்குப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'உத்தம வில்லன்' படம் தோல்வியடைந்ததையடுத்து அவர் சென்னையில் தமிழ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து படத்தின் முதல் பார்வை வெளியிடுவதை தவிர்த்திருக்கிறார் என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

தமிழில் தூங்காவனம் மற்றும் தெலுங்கில் 'சீகட்டி ராஜ்ஜியம்' என பெயரிடப்பட்டுள்ள போஸ்டர்களையும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். ஹைதராபாத்தில் இன்று ஆரம்பமாகும் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடக்க உள்ளதாகத் தெரிகிறது. 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions