தூங்காவனத்தை 50வது படமாக்க த்ரிஷா ஆசை

Bookmark and Share

தூங்காவனத்தை 50வது படமாக்க த்ரிஷா ஆசை

2002ம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கிய த்ரிஷா இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 47 படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மட்டும் இதுவரை நடிக்கவில்லை. அவர் நடித்துள்ள பூலோகம் படம் மட்டும் வெளிவராமல் நிற்கிறது.

தற்போது அப்பாடக்கர், ப்ரியம், போகி, அரண்மனை 2ம் பாகம் படங்களில் நடித்து வருகிறார். கமலுடன் தூங்காவனம் படத்தில் நடிக்கிறார். 47 படங்களில் நடித்துள்ள திரிஷாவுக்கு 50வது படம் முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று விருப்பம்.

தூங்காவனத்துக்கு முன்னதாக பூலோகம், அப்பாடக்கர் படம் வெளிவந்து விட்டால் தூங்காவனம் த்ரிஷாவின் 50வது படமாகி விடும். ஒருவேளை பூலோகம் வெளிவராவிட்டாலும் அரண்மனை 2 வெளிவந்து தூங்காவனத்தை 50வது படமாக்கி விடும்.

கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு படத்தை தள்ளிவைத்தோ, அல்லது முன்பே ரிலீஸ் செய்ய வைத்தோ தூங்காவனத்தை 50 வது படமாக்க முயற்சித்து வருகிறார். தனது ஆசையை கமலின் காதில் போட்டு வைத்துள்ளார்.

 


Post your comment





Related News
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
ஆன்லைனில் வெளியானது தூங்காவனம்!
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
கமலின் புதிய திட்டம்!
சண்டை காட்சிகளில் நடிக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது: திரிஷா
முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்
உடைந்து கொண்டிருக்கும் உலகத்திற்காக பிரார்த்தியுங்கள்: திரிஷா
எனது நீண்ட நாள் ஆசை இது... மனம் திறந்த த்ரிஷா
வேதாளம், தூங்காவனத்திற்கு வந்த சோதனையா இது? அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions