தூங்காவனம் படத்தில் கமல்ஹாசன் மனைவியாக ஆஷா சரத்?

Bookmark and Share

தூங்காவனம் படத்தில் கமல்ஹாசன் மனைவியாக ஆஷா சரத்?

பாபநாசம் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் படம் தூங்காவனம். இந்தப் படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார் என்றே தகவல்கள் வெளியாகின.

ஆனால், இப்போது படத்தில் கமல்ஹாசன் மனைவியாக  பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆஷா சரத் நடிக்கிறார் என்கிறார்கள்.

நேற்று நடைபெற்ற பாபநாசம் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கூட இந்தப் படத்தில் நடித்துள்ள பல திறமைசாலிகளை தொடர்ந்து என் படத்தில் பயன்படுத்த உள்ளேன், என்று கமல்ஹாசன் தெரிவித்தார். அதோடு, தூங்காவனம் படத்திலேயே அதை ஆரம்பித்துவிட்டார். கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிப்பது பற்றி ஏற்கெனவே ஆஷா சரத் சொல்லியிருந்தார்.

இப்போது அவர் கமல்ஹாசனின் மனைவியாக நடிப்பதுதான் புதிய தகவல். ஆஷா சரத் மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக வர்ஷம் படத்திலும் மோகன்லால் ஜோடியாக கர்மயோதா படத்திலும் நடித்திருக்கிறார்.

தன்னுடன் நடிப்பவர்கள் சிறப்பாக நடித்தால் அவர்களுக்குத் தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் வாய்ப்பை கமல்ஹாசன் கொடுப்பது வழக்கம். ஆன்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தார்கள்.

அடுத்து உத்தம வில்லன் படத்திலும் அவருடன் நடித்தார்கள். அந்த அதிர்ஷ்டம் தற்போது ஆஷா சரத்துக்கும் கிடைத்திருக்கிறது.


Post your comment





Related News
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
ஆன்லைனில் வெளியானது தூங்காவனம்!
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
கமலின் புதிய திட்டம்!
சண்டை காட்சிகளில் நடிக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது: திரிஷா
முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்
உடைந்து கொண்டிருக்கும் உலகத்திற்காக பிரார்த்தியுங்கள்: திரிஷா
எனது நீண்ட நாள் ஆசை இது... மனம் திறந்த த்ரிஷா
வேதாளம், தூங்காவனத்திற்கு வந்த சோதனையா இது? அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions