தூங்காவனம் பிரெஞ்ச் படத்தின் ரீமேக்கா ?

Bookmark and Share

தூங்காவனம் பிரெஞ்ச் படத்தின் ரீமேக்கா ?

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் மற்றும் பலர் நடித்து வரும் தூங்காவனம் படம் 2011ம் ஆண்டு வெளிவந்த பிரெஞ்சு படமான  ஸ்லீப்லெஸ் நைட் என்ற படத்தின் கதையைத் தழுவியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஃபிரெட்ரிக் ஜார்டின் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் 2011ம் ஆண்டு டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்ற படமாகும்.

காவல்துறையில் துப்பறியும் அதிகாரியாகப் பணியாற்றுபவர் ஒரு முறை போதைப் பொருள் கடத்தல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அந்த போதைப் பொருள் நைட் கிளப் ஓனர் ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரிய வருகிறது.

அதனால் ஆத்திரமடையும் அந்த நைட் கிளப் ஓனர் காவல் துறை அதிகாரியின் மகனைக் கடத்தி விடுகிறார். 

போதைப் பொருளை ஒப்படைத்தால்தான், அவரின் மகனை திரும்பத் தருவேன் என்கிறார். கடத்தப்பட்ட போதைப் பொருளைக் கொடுத்து கடத்தப்பட்ட தன் மகனை காவல் துறை அதிகாரி காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.ஒரே இரவில் நடைபெறும் இந்தக் கதையில்தான் தற்போது கமல்ஹாசன் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறாராம். 

ஸ்லீப்லெஸ் நைட் பிரெஞ்ச் திரைப்படம் பிரான்ஸ் நாட்டு திரையுலக வசூல் வரலாற்றில் வெளியான முதல் வார வசூல் நிலவரப்படி 15வது இடத்தைப் பிடித்துள்ள படமாக விளங்கி வருகிறது. இப்படத்தின் அமெரிக்க ரீமேக்கும் இந்த ஆண்டு தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹைதரபாத்தில் நடைபெற்று வரும் முதல் கட்டப் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. அதன்பின்,அடுத்த சில நாட்களில் 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. 


Post your comment





Related News
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
ஆன்லைனில் வெளியானது தூங்காவனம்!
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
கமலின் புதிய திட்டம்!
சண்டை காட்சிகளில் நடிக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது: திரிஷா
முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்
உடைந்து கொண்டிருக்கும் உலகத்திற்காக பிரார்த்தியுங்கள்: திரிஷா
எனது நீண்ட நாள் ஆசை இது... மனம் திறந்த த்ரிஷா
வேதாளம், தூங்காவனத்திற்கு வந்த சோதனையா இது? அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions