தூங்காவனம் ஐதராபாத்தில் ஆரம்பம்...!

Bookmark and Share

தூங்காவனம்  ஐதராபாத்தில் ஆரம்பம்...!

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாக உள்ளதாக தெரிகிறது.

உத்தம வில்லன் படத்தின் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசன் இனி, கொஞ்சம் ரிஸ்க்கான கதைகளில் நடிக்க மாட்டார் என்றே தெரிகிறது. படத்தை வாங்கியவர்களுக்கும், படத்தைத் தயாரித்தவர்களுக்கும், படத்தைப் பார்த்தவர்களுக்கும் சோதனையாகவே அமைந்து விட்டது உத்தம வில்லன்.

கமல்ஹாசன் நடித்துள்ள  பாபநாசம் படம் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படம் ஒரு த்ரில்லராகவும், கமர்ஷியல் படமாகவும் இருப்பதால் வசூலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே கோலிவுட்டில் கருதுகிறார்கள். இதற்கடுத்து  விஸ்வரூபம் 2 படம் வெளிவந்தாலும் அதுவும் கமர்ஷியல் படமாகவே இருக்கும்.

அதற்கடுத்து வெளிவர உள்ள  தூங்காவனம் படமும் கமர்ஷியல் படமாகத்தான் இருக்கப் போகிறது. ஆக, இன்னும் கொஞ்ச காலத்திற்கு ரிஸ்க்கான கமல்ஹாசன் படங்களை நாமே நினைத்தால் கூடப் பார்க்க முடியாது.

இந்த மூன்று படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருவதற்கே எப்படியும் ஒரு வருடம் ஓடி விடும். அதற்குள் வேறு ஒரு டிரெண்ட் வந்து விட்டால், கமல்ஹாசன் தன்னுடைய சோதனை முயற்சிகளை மீண்டும் தொடர்வாரா என்பது சந்தேகம்தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். எப்படியோ கமல்ஹாசன் படங்கள்  கல்லா கட்டினால் சரி...!


Post your comment





Related News
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
ஆன்லைனில் வெளியானது தூங்காவனம்!
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
கமலின் புதிய திட்டம்!
சண்டை காட்சிகளில் நடிக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது: திரிஷா
முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்
உடைந்து கொண்டிருக்கும் உலகத்திற்காக பிரார்த்தியுங்கள்: திரிஷா
எனது நீண்ட நாள் ஆசை இது... மனம் திறந்த த்ரிஷா
வேதாளம், தூங்காவனத்திற்கு வந்த சோதனையா இது? அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions