தூங்காவனம் படத்தில் அதிரடி சண்டை காட்சிகளில் நடிக்கும் கமல்!

Bookmark and Share

தூங்காவனம் படத்தில் அதிரடி சண்டை காட்சிகளில் நடிக்கும் கமல்!

ஸ்லீப்லெஸ் நைட் ஹாலிவுட் படத்தின் கதையை தழுவி உருவாக்கப்பட்டு வரும் படம் தூங்காவனம். இந்த படத்துக்காக பாபநாசம் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஜீன்ஸ் பேண்ட்- டீசர்ட் என யூத் கெட்டப்பில் நடிக்கிறார் கமல்.

அவருடன் த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷாசரத் உள்பட பல முக்கிய நடிகர் நடிகைகளும் அப்படத்தில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களாக இடைவிடாமல் நடந்து வந்தது. இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதையடுத்து சில முக்கியத்துவம் வாய்ந்த சண்டை காட்சிகள் படமாகி வருகிறது.

பாடல் காட்சிகளில் த்ரிஷாவுடன் செமத்தியான ஆட்டம் போட்டிருக்கும் கமல், அதிரடி சண்டை காட்சிகளிலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக தனது படங்களில் சண்டை காட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்காத கமல், இது ஹாலிவுட் படத்தை தழுவி எடுப்பதால், படத்தின் ரிசல்ட் அந்த படத்துக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதால், நடனத்திற்கு இணையாக சண்டை காட்சிகளிலும் கூடுதல் வேகம் காட்டி நடித்துக்கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
ஆன்லைனில் வெளியானது தூங்காவனம்!
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
கமலின் புதிய திட்டம்!
சண்டை காட்சிகளில் நடிக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது: திரிஷா
முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்
உடைந்து கொண்டிருக்கும் உலகத்திற்காக பிரார்த்தியுங்கள்: திரிஷா
எனது நீண்ட நாள் ஆசை இது... மனம் திறந்த த்ரிஷா
வேதாளம், தூங்காவனத்திற்கு வந்த சோதனையா இது? அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions