நாளுக்குநாள் பெரிதாகும் தூங்கா வனம் - சம்பத்தும் இணைந்தார்

Bookmark and Share

நாளுக்குநாள் பெரிதாகும் தூங்கா வனம் - சம்பத்தும் இணைந்தார்

கமல் எழுதி நடிக்கும் தூங்கா வனம் படத்தில் ஒவ்வொரு நாளும் முக்கிய நடிகர்கள் இணைந்தபடி உள்ளனர். கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பதாக சொல்லப்பட்ட இந்தப் படத்தில் கன்னட நடிகர் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

பொல்லாதவன், ஆடுகளம், ஹரிதாஸ் படங்களின் மூலம் சிறந்த நடிகர் என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டவர் கிஷோர். அவரைப் போல் தமிழுக்கு வந்த இன்னொரு நல்ல நடிகர், சம்பத். ஆரண்யகாண்டம், கோவா படங்கள் சம்பத்தின் திறமைக்கு சான்று.

அவரும் படத்தில் முக்கிய வேடம் ஒன்றை செய்கிறார். நாசர், சந்தானபாரதி, அஜய் ரத்தினம், வையாபுரி என்ற தனது வழக்கமான நடிகர்களை விட்டு இந்த புதிய திறமைசாலிகளை கமல் பயன்படுத்துவதே புத்துணர்ச்சியாகதான் உள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions