தூத்துக்குடி-2 படத்தில் நடிகரான சஞ்சய்ராம்!

Bookmark and Share

தூத்துக்குடி-2 படத்தில் நடிகரான சஞ்சய்ராம்!

ஹரிகுமார்- கார்த்திகா நடிப்பில் வெளியான படம் தூத்துக்குடி. அந்த படத்தை சஞ்சய்ராம் இயக்கியிருந்தார். 2006-ம் ஆண்டு வெளியான அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகிக்கொண்டிருக்கிறது.

இதற்கு கிளியாந்தட்டு தூத்துக்குடி-2 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் பாகத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு தூத்துக்குடியிலேயே நடந்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சென்னையிலேயே நடந்துள்ளது.

சஞ்சய்ராம் இயக்கி வரும் இந்த படத்தில் குகன் என்ற புதுமுகம் நாயகனாக நடித்துள்ளார். மூன்று புதுமுகங்கள் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றபடி, சஞ்சய்ராம் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளாராம்.

முதல் பாகத்தில் ஹரிக்குமார் நடித்தது போன்ற ஒரு வெயிட்டான வேடத்தில் அவர் நடித்திருக்கிறார். இதுவரை, 95 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில, இன்னும் 5 சதவிகிதம்தான் படப்பிடிப்பு நடைபெற வேண்டியது உள்ளதாம்.

இதற்கிடையே போஸ்ட் புரடக்சன்ஸ் வேலைகளும் துரிதமாக நடந்து வரும் நிலையில், ஏப்ரலில் திரைக்கு வருகிறதாம் கிளியாந்தட்டு தூததுக்குடி-2. மேலும், முதல் பாகத்தில் மருந்துக்கும் கவர்ச்சியை காண்பிக்காத சஞ்சய்ராம் இந்த படத்தில் படுகவர்ச்சியான காட்சிகளையும் இணைத்துளளாராம். 


Post your comment





Related News
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions