தொப்பி ஜாதியை அடையாளப்படுத்தும் படம் அல்ல: இயக்குனர் விளக்கம்

Bookmark and Share

தொப்பி ஜாதியை அடையாளப்படுத்தும் படம் அல்ல: இயக்குனர் விளக்கம்

மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கிய எழுத்தாளர் யுரேகா அடுத்து இயக்கியுள்ள படம் தொப்பி. இது தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் குற்றப்பரம்பரை என்று சொல்லப்பட்ட ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தி பிடிக்கிற படம் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து யுரேகா கூறியதாவது: 

இது மலைவாழ் ஆதிவாசி மக்களின் படம். ஆங்கிலேயர்கள் குற்றப்பரம்பரை என்று ஒரு குறிபிட்ட ஜாதியை மட்டும் குறிப்பிடவில்லை. நான்கைந்து ஜாதிகளை குறிப்பிட்டிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று இந்தப் படத்தில் வரும் மலைவாழ் மக்கள். அவர்களை பற்றிய கதை என்றாலும் ஜாதியை உயர்த்திபிடிக்கவில்லை.

வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு சென்ற பிறகும் குற்றப்பரம்பரை என்ற பழியில் இருந்து அவர்கள் இன்னும் மீளமுடியாமல் குற்றஉணர்வுடன் வாழ்ந்து வருகிறார்கள். அந்த சமூத்திலிருந்து வரும் ஒரு இளைஞன் தான் போலீசாகி அதை மாற்ற முயற்சிக்கிறார்.

அது நடந்ததா என்பதுதான் கதை. அடக்கப்பட்ட ஒரு சமூகத்தின் எழுச்சியை பதிவு செய்கிற படம். என்றார். 


Post your comment





Related News
குற்றப் பரம்பரையின் வலிகளைச் சொல்லும் வைரமுத்துவின் வரிகளில் தொப்பி!
இன்னிசையும் இயற்கையும் ஒன்றான ‘தொப்பி’
இயக்குனர் யுரேகா எனது குரு - முரளி ராம்
போலீஸ் ஆக ஆசைப்படும் திருடன்… மலையாள நாயகி அறிமுகமாகும் ‘தொப்பி’ பட சுவாரஸ்யங்கள்
\'மைனா\', \'கும்கி\'யை தொடர்ந்து தேனி மலை பகுதியில் படமாகும்: \'தொப்பி\'..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions