தோழா படத்தில் நாகர்ஜுனாவுக்காக 25 லட்சத்தில் உருவாகிய ஸ்பெஷல் நாற்காலி!

Bookmark and Share

தோழா படத்தில் நாகர்ஜுனாவுக்காக 25 லட்சத்தில் உருவாகிய ஸ்பெஷல் நாற்காலி!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் நாகர்ஜுனா முதல்முறையாக Quadriplegic நோயாள் பாதிக்கப்பட்டவராக படம் முழுக்க வீல் சேரில் உட்கார்ந்தபடியே நடித்துள்ளார்.

இதற்காக ஸ்பெஷலாக ஒரு நாற்காலி சுவீடனில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் விலை மட்டும் ரூ. 25 லட்சமாம். ரூ. 60 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள தோழா மற்றும் ஊபிரி (தெலுங்கு) திரைப்படம் வரும் மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions