தோழா படம்பார்த்து கண்கலங்கிய நாகர்ஜுனா

Bookmark and Share

தோழா படம்பார்த்து கண்கலங்கிய நாகர்ஜுனா

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் நாகர்ஜுனா முதல்முறையாக Quadriplegic நோயாள் பாதிக்கப்பட்டவராக படம் முழுக்க வீல் சேரில் உட்கார்ந்தபடியே நடித்துள்ளார்.

நாகர்ஜுனா இந்த ரோலில் நடிக்க முதலில் அவரது குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. எனினும் அவர்கள் எதிர்ப்பையும் மீறி இப்படத்தில் அவர் நடித்தார். இதை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ‘தோழா’வின் தெலுங்கு பதிப்பை அவர் தனது குடும்பத்தினருக்கு திரையிட்டு காட்டியுள்ளார். படம் பார்த்ததும் நாகர்ஜூனாவின் நடிப்பையும் படத்துக்கான அவரது அர்பணிப்பையும் கண்டு அவரது குடும்பத்தினர் உணர்ச்சிவசத்தில் நெகிழ்ந்து போய் விட்டார்களாம்.

பின்னர் அங்கேயே நாகர்ஜூனாவை கட்டித்தழுவி அவர்கள் பாராட்டியுள்ளனர். தனது குடும்பத்தினரிடம் இருந்து கிடைத்த பாராட்டு மழையால் நாகர்ஜுனா உடனடியாக கண்கலங்கிவிட்டாராம். இது அக்கினனி குடும்பத்தினருக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம் என்பதை மட்டும் உணரமுடிகிறது.

தோழா மற்றும் ஊபிரி (தெலுங்கு) திரைப்படம் வரும் மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions