எல்லாமே கடவுளின் செயல் - த்ரிஷா

Bookmark and Share

எல்லாமே கடவுளின் செயல் - த்ரிஷா

நடிகை த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் வருண்மணியனுக்கும் நடக்கவிருந்த திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது அனைவருக்கும் தெரிந்ததே. இது பற்றி வருண் மணியன் இதுவரை எதுவும் சொல்லாத நிலையில், த்ரிஷாவின் அம்மா திருமணம் நின்று போனதைப் பற்றி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இப்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் த்ரிஷாவும் அது பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். “திருமணம் நின்று போனது உண்மைதான். இது எதிர்பாராத ஒன்று, நம்மை மீறி ஒரு விஷயம் நடக்கும் போது, அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இப்போதைக்கு எனது கவனம் முழுவதும் நடிப்பின் மீதே இருக்கிறது. பழைய விஷயங்களைப் பற்றிப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்றுதான் பார்க்க வேண்டும்.

என் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன். நான் கடவுளின் குழந்தை, அவர் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார். கடவுளின் ஆசைப்படி எது நடக்கிறதோ அதை நான் ஏற்றுக் கொள்வேன்,” என்று சொல்லியிருக்கிறார்.

அஜித்துடன் ஜோடியாக நடித்த பிறகு தற்போது கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் 'தூங்காவனம்' படம் மூலம் தன்னுடைய அடுத்த இன்னிங்சை பரபரப்பாக ஆரம்பித்துவிட்டார் த்ரிஷா.

 


Post your comment





Related News
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
த்ரிஷா நடிக்கும் நாயகி
மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் த்ரிஷா!
கெளதம் மேனன் படத்தில் அஜித்- அனுஷ்கா- திரிஷா..!
கோவா கடற்கரையில் ராணாவுடன் திரிஷா..!
அடுத்த ஆண்டிலிருந்து புதுப்படங்களுக்கு நோ எண்ட்ரி போர்ட் மாட்டிய த்ரிஷா..!
ஜீவாவுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா!
த்ரிஷாவென நினைத்து அவரின் தோழிகளுக்கு தொல்லை கொடுத்த ரசிகர்கள்!
த்ரிஷாவிடம் கெஞ்சிய வங்கி அதிகாரிகள்!
அமீருடன் ஜோடி சேருவாரா? த்ரிஷா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions