த்ரிஷா நடிக்கும் நாயகி

Bookmark and Share

த்ரிஷா நடிக்கும் நாயகி

பெரும்பாலும் பிற மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களைத் தற்போது தமிழில் நேரடி படங்களாக வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

தற்போது ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் பல காட்சிகள் கூட தமிழில் உதட்டசைவு பொருந்தாமல் இருந்ததைப் பலர் கவனித்திருக்கலாம். பெரும்பாலும் தெலுங்கிலோ, கன்னடத்திலோ எடுக்கப்பட்ட படங்களை, சில தமிழ் காமெடி நடிகர்களை மட்டும் நடிக்க வைத்து குறைந்த பட்ஜெட்டில் நேரடித் தமிழ்ப் படங்களைப் போல வெளியிடுகிறார்கள்.

தற்போது அந்த வரிசையில் த்ரிஷா நடித்துள்ள நாயகி படத்தின் பூஜையை நாளை சென்னையில் நடத்த உள்ளார்கள். இப்படத்தை லவ் யு பங்காரம் என்ற தெலுங்குப் படத்தை இயக்கிய கோபி இயக்கி உள்ளார். கன்னடத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் நடத்தி முடித்துள்ளார்களாம்.

கன்னடத்தில் முக்கால்வாசிக்கும் மேல் எடுத்து முடிக்கப்பட்டுள்ள படத்தை நாயகி என்ற பெயரில் தற்போது தமிழ்ப் படமாக மாற்றும் வேலைகள் தொடங்கியுள்ளன.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions