ஒரே நாளில் நடக்கும் மூன்று சம்பவம்! துணிகரம்

Bookmark and Share

ஒரே நாளில் நடக்கும் மூன்று சம்பவம்! துணிகரம்

துணிகரம் JVDM கிரியேஷன்ஸ் சார்பில் பாலசுதன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் துணிகரம். இப்படத்தில் புதுமுகங்கள் வினோத் லோகிதாசன், பரணி மற்றும் செம்மலர் அன்னம் நடித்துள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் கூத்து பட்டறை நடிகர்கள். இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூர், பல்லடம், காப்புகாடு ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதன் கதை ஒரே நாளில் நடக்கும் மூன்று சம்பவத்தின் விளைவுகளை மையமாக கொண்ட திரில்லர் கதையாகும்.

ஒளிப்பதிவாளர் மதியின் உதவியாளர் மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்ய பாடல்களுக்கு இசை அமைப்பாளராக ஷான் கோகுல் அவர்களும் பின்னணி இசைக்கு தனுஜ் மேனனும் பணியாற்றி உள்ளனர். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions