துப்பாக்கி, கத்தி, தெறி படங்களின் பட்டியலில் இணைந்த `பைரவா'

Bookmark and Share

துப்பாக்கி, கத்தி, தெறி படங்களின் பட்டியலில் இணைந்த `பைரவா'

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பைரவா’ படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ந் தேதி ரிலீசானது. கிட்டத்தட்ட 55 நாடுகளில்  பிரம்மாண்டமாக வெளிவந்த இப்படம் ரிலீசான தேதியில் மட்டும் ரூ.16 கோடிக்கும் மேல் வசூலித்தாக கூறப்பட்டது. அன்றைய  தேதியில் சென்னையில் மட்டும் ரூ.92 லட்சம் வரை வசூல் செய்ததது. 

பின்னர் 4 நாட்களில் `பைரவா' படம் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில்  `பைரவா' படத்தின் வசூல் 40 கோடியை தாண்டியுள்ளது. 

இதற்கு முன்னதாக விஜய்யின் `துப்பாக்கி', `கத்தி', `தெறி' உள்ளிட்ட 3 படங்கள் மட்டுமே 40 கோடி வசூலைப் பெற்றுள்ள நிலையில்  `பைரவா' படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions