துப்பாக்கி-2 எப்போது..? - ஏ.ஆர்.முருகதாஸ் பதில்!

Bookmark and Share

துப்பாக்கி-2 எப்போது..? - ஏ.ஆர்.முருகதாஸ் பதில்!

விஜய்-முருகதாஸ் முதன்முறையாக இணைந்த படம் ’துப்பாக்கி’. 2012-ம் ஆண்டு தீபாவளி சரவெடியாக வெளிவந்த இப்படம், சூப்பர்-டூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் வாரி குவித்தது.

விஜய்யை புதுமாதிரியாக ஒரு ஸ்டைலிஸான ரோலில் காண்பித்தார் முருகதாஸ். ரசிகர்களுக்கும் அந்த ஸ்டைல் மிகவும் பிடித்து போனது. துப்பாக்கியை வெற்றியை தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்து கத்தி படம் பண்ணினர்.

இப்படத்திற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும், படம் ரூ.100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்டில் சேர்ந்தது. தற்போது விஜய், சிம்புதேவன் படத்திலும், முருகதாஸ் இந்தி படத்திலும் பிஸியாக இருக்கின்றனர்.

இந்நிலையில் தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஏ.ஆர்.முருகதாஸிடம், துப்பாக்கி-2 எப்போது உருவாகும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முருகதாஸ். பொதுவாக எனக்கு ஒரு படத்தின் தொடர்ச்சி பண்ணுவதில் உடன்பாடு கிடையாது.

கதைகளம் உள்ளிட்ட எல்லா விஷயங்களும் எனக்கு புதுசாக இருக்க வேண்டும். ஏற்கனவே வெளிவந்த படத்தின் தொடர்ச்சியை எடுத்தால், முதல் படத்தை காட்டிலும் இந்தப்படம் பெரிதாக இல்லை என்று ஒருவரும் சொல்லிவிடக்கூடாது. அதனால் இந்த விஷயத்தில் கவனமாக இருப்பேன்.

ஆனாலும் துப்பாக்கி-2 படத்திற்கான கதை திடீரென தோன்றினால் நிச்சயம் பண்ணுவேன். அதுவும் விஜய்யை வைத்து பண்ணுவேன். துப்பாக்கி-2 மட்டுமல்ல, இன்னும் நிறைய படங்கள் விஜய்யை வைத்து பண்ண வேண்டும் என்ற ஆசையிருக்கிறது என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions