பிரபலங்களை இமிடேட் செய்து சிக்கலை தேடும் குணச்சித்திர நடிகர்..!

Bookmark and Share

பிரபலங்களை இமிடேட் செய்து சிக்கலை தேடும் குணச்சித்திர நடிகர்..!

ஒரு படம் முழுவதும் வந்தாலும், பத்து வரி வசனம் கூட பேசாமல் கவனம் ஈர்க்கும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மலையாள குணச்சித்திர நடிகர் டினி டாம் கூட அந்த வகையை சேர்ந்தவர் தான்.

அண்ணன் தம்பி படத்தில் இரண்டு வேடங்களில் நடித்த மம்முட்டிக்கு டூப்பாக நடித்தவர் இவர்தான். ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'இந்தியன் ரூபி' படத்தில் பிருத்விராஜுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் புரோக்கராக படம் நெடுகிலும் கூடவே வரும் டினி டாம் கேரக்டரை ரசிகர்கள் ரொம்பவே ரசித்தனர்.

அதன்பிறகு தான் மலையாளப்படங்களில் முக்கியத்துவமான கேரக்டர்கள் அவரை தேடிவர ஆரம்பித்தன. கடந்த வருடம் வெளியான பிளாக் பஸ்டர் ஹிட்டான 'வெள்ளிமூங்கா' வில் கதாநாயகன் பிஜுமேனனுக்கு இணையாக படம் முழுவதும் வரும் அரசியல்வாதி வேடத்தில் காமெடியாக வில்லத்தனம் காட்டியிருந்தார் டினி டாம்.

படத்தை பார்த்த பலரும் அவரது கேரக்டர் கேரளாவில் உள்ள ராஜேஷ் என்கிற அரசியல்வாதியை பிரதிபலித்ததாக கூறினார்கள். இப்போது 'ஷி டாக்ஸி' என்கிற படத்தில் அவரது கெட்டப்பை பார்த்தால் பிஜேபி தலைவர் அமித்ஷா போல இருக்கிறது என்கிற பேச்சு கிளம்பியுள்ளது.. இதுதவிர மலையாள சினிமாவின் எடக்கு மடக்கான தயாரிப்பாளர் ஒருவரை பிரதிபலிக்கும் விதமாக 'ஆயாள் ஞானல்ல' என்கிற படத்தில் நடித்து வருகிறார் டினி டாம்.

படம் பார்ப்பவர்களுக்கு அந்த தயாரிப்பாளர் யார் என்பது பார்க்கும்போதே தெரிந்து விடும் என்கிறார்கள்.. எப்படியோ அடுத்தவரை இமிடேட் செய்து சிக்கலில் மாட்டாமல் இருந்தால் சரிதான். 

 


Post your comment





Related News
வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்
முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா தி மம்மி- பிரமாண்ட வசூல்
ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!
பாக்ஸ் ஆபிஸை தவரவிட்ட பான்டோம்
மூன்று நாளில் 30 கோடியை தாண்டிய பான்டோம்!
பான்டோம் படம் முதல்நாளிலேயே ரூ. 8 கோடி வசூல்
தன் பான்டோம் படத்திற்குத் தடை, அச்சத்தில் கபீர் கான்
பாகிஸ்தானில் பான்டோம் படத்திற்கு தடை
புதிய ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தேர்வு!
பான்டோம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions