புதிய ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தேர்வு!

Bookmark and Share

புதிய ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தேர்வு!

ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க, சூப்பர்மேன், அயர்ன்மேன் மாதிரி சூப்பர் ஹீரோவாக நடிக்க தனியாக இண்டர்வியூ வைத்து நடிகர்களை தேர்வு செய்வார்கள். அமெரிக்க இளைஞர்களுக்கு சூப்பர் பவர் கேரக்டர்களில் நடிப்பது பெரிய கனவாக இருக்கும்.

இதுவரை வெளிவந்த ஸ்பைடர் மேன் படங்களில் முதல் பாகத்தில் டோபி மகியூரும், இரண்டாம், மூன்றாம் பாகத்தில் ஆண்ட்ரூ கார்பீல்டும் நடித்தனர்.

அந்த வகையில் 4ம் பாகத்துக்கான ஸ்பைடர் மேனை தேர்வு செய்ய கடந்த சில மாதங்களாக ஆடிசன் நடந்து வந்தது. இதில் டாம் ஹாலண்ட் ஸ்பைடர்மேனாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதனை படத்தை தயாரிக்கும் சோனி பிக்சர்ஸ் நிறுவனமும், மார்வெல் ஸ்டூடியோ நிறுவனமும் அறிவித்துள்ளது.

டாம் ஹாலண்ட் ஏற்கெனவே தி இம்பாசிபிள், கேப்டன் அமெரிக்கா, சிவில் வார் உள்பட சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார். புதிய ஸ்பைடர் மேனை ஜான் வாட்ஸ் இயக்குகிறார், 2017ம் ஆண்டு வெளிவருகிறது.


Post your comment





Related News
வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்
முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா தி மம்மி- பிரமாண்ட வசூல்
ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!
பாக்ஸ் ஆபிஸை தவரவிட்ட பான்டோம்
மூன்று நாளில் 30 கோடியை தாண்டிய பான்டோம்!
பான்டோம் படம் முதல்நாளிலேயே ரூ. 8 கோடி வசூல்
தன் பான்டோம் படத்திற்குத் தடை, அச்சத்தில் கபீர் கான்
பாகிஸ்தானில் பான்டோம் படத்திற்கு தடை
பான்டோம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்
ஜெயராமின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கிய நடிகை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions