“நான் எந்த போதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை” - டாம் சாக்கோ..!

Bookmark and Share

“நான் எந்த போதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை” -  டாம் சாக்கோ..!

கிட்டத்தட்ட இரண்டு மாத சிறைவாசம் முடிந்து ஒரு வழியாக ஜாமீனில் வெளிவந்துவிட்டார் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் டாம் சாக்கோ.

இவருக்கு இரண்டு நபர்கள் பொறுப்பேற்க, ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகை கட்டியதின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீனில் விடுதலையான சாக்கோ, தான் எந்தவிதமான போதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை என்றும், இப்படி இந்த வலையில் தான் சிக்க வைக்கப்பட்டேன் என தெரியவில்லை என்றும் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் தற்போது முதல் வேலையாக, தான் நடிக்க ஒப்புக்கொண்டு பாதியில் நிற்கும் படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு தனது போர்ஷனை சீக்கிரமாக முடித்து தரும் நடவடிக்கையில் இறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இவர்கள் கைது செய்யப்பட்டபோது ரத்தத்தை சாம்பிள் எடுத்து பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்திருந்தனர். அதில் டாம் சாக்கோ உட்பட அந்த நான்கு பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என ரிப்போர்ட் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்
முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா தி மம்மி- பிரமாண்ட வசூல்
ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!
பாக்ஸ் ஆபிஸை தவரவிட்ட பான்டோம்
மூன்று நாளில் 30 கோடியை தாண்டிய பான்டோம்!
பான்டோம் படம் முதல்நாளிலேயே ரூ. 8 கோடி வசூல்
தன் பான்டோம் படத்திற்குத் தடை, அச்சத்தில் கபீர் கான்
பாகிஸ்தானில் பான்டோம் படத்திற்கு தடை
புதிய ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தேர்வு!
பான்டோம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions