“சுதந்திரம் தான் உண்மையான போதை” - ஜாமீனில் வந்த டாம் சாக்கோ தத்துவம்..!

Bookmark and Share

“சுதந்திரம் தான் உண்மையான போதை” - ஜாமீனில் வந்த டாம் சாக்கோ தத்துவம்..!

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட மலையாள நடிகர் டாம் சாக்கோவை அறுபது நாள் சிறைவாசம் ரொம்பவே மாற்றியுள்ளது.

தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் அவர் வாயைத்திறந்து பேசினாலே தத்துவ முத்துக்கள் தான் உதிர்கின்றன. தான் இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டதாக கூறும் சாக்கோ, ஒரு மனிதனுக்கு சுதந்திரம் தான் உண்மையான போதை என்பதை ஜெயிலில் இருந்த நாட்களில் உணர்ந்துகொண்டாராம்.

“சின்ன வயதிலேயே என் அம்மா புகைபிடிக்காதே, மது அருந்தாதே என என்னிடம் படித்து படித்து சொல்லுவார்கள். ஆனால் நான் அதையெல்லாம் அலட்சியம் செய்தேன். அந்த அலட்சியத்துக்கான தண்டனை தான் இந்த அறுபது நாள் சிறைவாசம்.. வழக்கு விசாரணையில் இருப்பதால் இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.. நான் நிரபராதியாக நிச்சயம் விடுதலை ஆவேன்..

அப்போது முழு விபரம் சொல்கிறேன்” என்கிறார் தெளிவுடன். அவர் கடைசியாக ‘விஸ்வாசம் அதல்லே எல்லாம்’ அதாவது ‘நம்பிக்கை அதுதானே எல்லாம்’ என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது தான் கைது செய்யப்பட்டார். “அந்தப்படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டதாக சொல்கிறார்கள்..

ஆனால் உண்மை அதுவல்ல. நான் இன்னும் அந்தப்படத்தில் இருக்கிறேன்” என்கிறார் சாக்கோ நம்பிக்கையுடன். இப்போது அவர் பேசுவதற்கும் படத்தின் தலைப்புக்கும் எவ்வளவு பொருத்தம் பார்த்தீர்களா..?

 


Post your comment





Related News
வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்
முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா தி மம்மி- பிரமாண்ட வசூல்
ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!
பாக்ஸ் ஆபிஸை தவரவிட்ட பான்டோம்
மூன்று நாளில் 30 கோடியை தாண்டிய பான்டோம்!
பான்டோம் படம் முதல்நாளிலேயே ரூ. 8 கோடி வசூல்
தன் பான்டோம் படத்திற்குத் தடை, அச்சத்தில் கபீர் கான்
பாகிஸ்தானில் பான்டோம் படத்திற்கு தடை
புதிய ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தேர்வு!
பான்டோம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions