போதைப்பொருள் வழக்கில் மலையாள நடிகருக்கு ஜாமீன் கிடைத்தது..!

Bookmark and Share

போதைப்பொருள் வழக்கில் மலையாள நடிகருக்கு ஜாமீன் கிடைத்தது..!

கடந்த மாதம் மலையாள வில்லன் நடிகரான ஷைன் டாம் சாக்கோ, கோகைய்ன் என்கிற போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அவருடன் ஒரு பெண் உதவி இயக்குனர் உட்பட இன்னும் மூன்று பேரும் கூட கைதுசெய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் அப்போது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் டாம் சாக்கோ மற்றும் உதவி இயக்குனர் பிளஸ்சி, மாடல் அழகி ரேஷ்மா உட்பட ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்குமாறு கோரப்பட்டது.

ஆனால் அரசு தரப்பு வக்கீலோ, டாம் சாக்கோவை ஜாமீனில் விட்டால் அவர் தலைமறைவாகிவிடும் அபாயம் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். தற்போது ஒருவழியாக டாம் சாக்கோ உட்பட ஐந்து பேருக்கும் எர்ணாகுளம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.

இது ஒருபக்கம் இருக்க, சமீபத்தில் இதேபோல போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்ட நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒக்கொவோ சிகோஸ்கி என்பவர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.


Post your comment





Related News
வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்
முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா தி மம்மி- பிரமாண்ட வசூல்
ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!
பாக்ஸ் ஆபிஸை தவரவிட்ட பான்டோம்
மூன்று நாளில் 30 கோடியை தாண்டிய பான்டோம்!
பான்டோம் படம் முதல்நாளிலேயே ரூ. 8 கோடி வசூல்
தன் பான்டோம் படத்திற்குத் தடை, அச்சத்தில் கபீர் கான்
பாகிஸ்தானில் பான்டோம் படத்திற்கு தடை
புதிய ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தேர்வு!
பான்டோம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions