சென்னையின் புதிய அடையாளம் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம் 51-வது கிளை அண்ணாநகரில் திறப்பு

Bookmark and Share

சென்னையின் புதிய அடையாளம் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம் 51-வது கிளை அண்ணாநகரில் திறப்பு

நவீன உலகின் அடையாளங்களில் ஒன்று சிகையலங்காரம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிகையலங்காரம் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்ஸன், லியானர்டோ டி காப்ரியோ என மேற்குலக பிரபலங்களின் சிகையலங்காரம் நம்மை வியக்க வைத்துள்ளன. அத்தகைய சிகையலங்காரஙகள் நமக்கு கிடைக்காதா என்று எண்ணி ஏங்கிய வேளையில் தான், தமிழ்நாட்டில் தடம் பதித்தது உலகின் பாரம்பரிய மிக்க சிகையலங்கார சேவை மையமான டோனி அண்ட் கய்..

இங்கிலாந்தை பூர்விமாக கொண்ட இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்கனவே 50 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது தனது புத்தம் புதிய 51-வது கிளையை முகப்பேர், மேற்கு அண்ணாநகர் விரிவாக்கம், பூங்கா சாலையில் கதவு எண் 34/w82B என்ற முகவரியில் திறந்துள்ளது டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ...பிரபல நடிகை சாக்ஷி அகர்வால், இந்த 51-வது கிளையை திறந்து வைத்தார். 

இத்தனை சிகையலங்காரங்களா என்று வியக்குமளவுக்கு பார்வையாளர்களை கவர்ந்தது டோனி அண்ட் கய் நவீன சிகையலங்கார மையத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் நடைபெற்ற வண்ணமிகு பேஷன் ஷோ.. கண்ணை கவரும் உடைகளுடனும், கருத்தை கவரும் நவீன சிகையலங்காரத்துடனும் அழகிகளும், இளைஞர்களும் மேடையில் வலம் வந்தனர்..வெறும் ஆடை அலங்காரம், சிகையலங்காரம் என்பதை தாண்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த பேஷன் ஷோ நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னையின் நவீன நாகரீகத்தை தீர்மானிக்கும் விஷயத்தில் தங்களது டோனி அண்ட் கய் ஷோரூம் விளங்குவதாக பெருமிதம் கொள்கின்றனர் இதன் உரிமையாளர்களான திரு டிமாண்டி மற்றும் சாம்பால் ஆகியோர்.. மேலும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளும் காத்திருப்பதாக கூறுகின்றனர் திரு டிமாண்டி மற்றும் சாம்பால்.. அதாவது, திறப்பு விழா துவங்கி அடுத்த மாதம் ஜுன் 15-ம் தேதி வரை, வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்டுவது தவிர பிற சேவைகளுக்கு 25 சதவிதம் வரை சலுகை அளிக்கப்படும் என்று கூறுகிறார் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் பிரிவின் தென்னிந்திய தலைவர் சாம்பால்.  

டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் மையத்தின் உரிமையாளரான திரு டிமாண்டி கூறுகையில், 1500 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் மையத்தில் இருபாலருக்கான மையம், பெண்களுக்கான தனிப்பிரிவு, நீராவியுடன் கூடிய 3 ஸ்பாக்கள், மணமக்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கான 1 தனியறை போன்றவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும் என்றார். இந்த கோடைகாலத்திற்கு ஏற்ற வகையில் உங்களை மாற்றிக் கொள்ளவும், மனம் விரும்பியவர்களுடன் பொழுதை கழிக்க உங்களை தகுதியானவராக மாற்றிக் கொள்ளவும் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் மையம் பெரிதும் துணை நிற்கும் என்கிறார் திரு சாம்பால்.. 

உங்களை நீங்களே புதியவராக உணர வேண்டுமா.. வாருங்கள், மாற்றத்தை உணருங்கள்.. டோனி அண்ட் கய்-யில்..

 


Post your comment

Related News
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
ரெஜினாவின் சர்ச்சை கதாபாத்திரத்திற்கு வரவேற்பு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
சினிமாவில் இணைந்த பிக்பாஸ் காதலர்கள்
கன்னடத்தில் அதிக சம்பளம் வாங்கும் ராஷ்மிகா
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions