டிராபிக் ராமசாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

டிராபிக் ராமசாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமூக போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி `டிராஃபிக் ராமசாமி' என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. விக்கி இயக்கியிருக்கும் இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்திருக்கிறார். அவரது மனைவி கதாபாத்திரத்தில் ரோகினி நடித்துள்ளார். 

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். 

பிரகாஷ்ராஜ், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ உள்ளிட்டோர் சிறப்பு வேடத்தில் வருகின்றனர். பாலமுரளி பாலு இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

படத்தில் இருந்து ஏற்கனவே `போராளி அன்ந்தம்', `கோமாளி' என இரு பாடல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் மற்ற பாடல்கள் இன்று வெளியாக இருக்கிறது.


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
தமிழை புறக்கணிக்கிறோம் - சீனுராமசாமி வேதனை
மிரட்டலுக்குப் பயமில்லை : ' டிராஃபிக் ராமசாமி ' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!
நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!
தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி
'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி
முதன்முறையாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைக்கும் பிரபல இயக்குனரின் படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions