பீப் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மகளிர் அமைப்பினர் சுவாதி கொலைக்கு போராடாதது ஏன்?: டி.ராஜேந்தர் பேட்டி

Bookmark and Share

பீப் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மகளிர் அமைப்பினர் சுவாதி கொலைக்கு போராடாதது ஏன்?: டி.ராஜேந்தர் பேட்டி

தண்டையார்பேட்டை, வினோபா நகரில் லட்சிய தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவன தலைவரும், டைரக்டருமான டி.ராஜேந்தர் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அரசியலில் இதுவரை லட்சிய தி.மு.க. தள்ளியே இருந்தது. இனிவரும் காலங்களில் அப்படி இருக்க மாட்டோம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் இளைஞர் பட்டாளத்துடன் போட்டியிடுவோம்.

‘பீப்’ பாடலுக்கு எதிராக மகளிர் அமைப்பினர் வீதியில் இறங்கி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது பொது இடத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதற்கு எதிராக அவர்கள் போராடாதது ஏன்? இனி எந்த சுவாதிக்கும் அப்படி ஒரு நிலைமை வரக் கூடாது.

பலமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்று கூறும் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் மக்கள் பிரச்சனை பற்றி பேசாமல் வெளிநடப்பு செய்கிறார். சட்டபையில் கருணாநிதிக்கு 2-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு யார் காரணம்?

மாநகராட்சி மேயரை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் சட்ட திருத்தம் கொண்டு வருவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சரியான காரணத்தை கூறவில்லை.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions