இமேஜை பாதுகாக்கும் த்ரிஷா!

Bookmark and Share

இமேஜை பாதுகாக்கும் த்ரிஷா!

தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த போதிலும், த்ரிஷாவின் கலைச்சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழில் ஜெயம்ரவியுடன் பூலோகம், அப்பாடக்கர் படங்களில் நடித்திருப்பவர், தெலுங்கில் லயன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த மூன்று படங்களுமே ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. அதையடுத்து, தமிழ் தெலுங்கில் வளரும் போகி படத்தில் நடித்து வருபவர், செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திலும் நடிக்கிறார்.

இதற்கிடையே கமல் நடிக்கும் ஓர் இரவில் படத்திலும் த்ரிஷாவே நாயகியாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. ஆக, இப்போதும் செம பிசியாக நடித்து வரும் த்ரிஷா, இதில் சிம்புவுடன் நடிக்கும் படத்தில் முத்தக்காட்சியில் நடிக்க ஒத்துக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தன்னிடம் அதுகுறித்து கேட்பவர்களிடம் அப்படி எந்த காட்சியிலும் நான் நடிக்கவில்லை என்று மறுத்து வருகிறார் த்ரிஷா.

மேலும், இதற்கு முன்பும் நான் லிமிட் தாண்டி நடித்ததில்லை. இனிமேலும் அப்படி நடிக்க மாட்டேன். எனக்கென்று ஒரு இமேஜ் உள்ளது. அதை காப்பாற்றும் வகையிலே எனது கதை செலக்சன் இருக்கும் என்கிறாராம்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions