காரணங்களுக்காக திருமணம் செய்யக் கூடாது - த்ரிஷா

Bookmark and Share

காரணங்களுக்காக திருமணம் செய்யக் கூடாது - த்ரிஷா

தென்னிந்தியத் திரையுலகில் இன்று வரை முன்னணி நடிகையாக இருந்து வருபவர் த்ரிஷா. சில மாதங்களுக்கு முன் அவருக்கும், தொழிலதிபரும் தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால், அதற்கடுத்த சில வாரங்களிலேயே அவர்களிருவருக்கும் இடையே பிரிவு என வதந்திகள் வந்தன. அதன் பின் அது பற்றி த்ரிஷா தரப்பிலிருந்து திருமணம் நின்று போய்விட்டது என்று தெரிவித்தார்கள்.

அதன்பின்தான் அந்த வதந்தி அடங்கின் போனது. அதன் பின் அந்த திருமண முறிவு பற்றி த்ரிஷா எந்த சந்தர்ப்பத்திலும் பேசவேயில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமண முறிவு பற்றி ஓரளவிற்கு வாய் திறந்து பேசியிருக்கிறார்.

“திருமணம் என்ற முறை மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. ஒருவர் காதலுக்காக மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டுமே தவிர காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்ளக் கூடாது.

என்னுடைய 25வது வயதில் எனக்குப் பொருத்தமான ஒருவரைப் பார்த்திருந்தால் இந்நேரம் என்னுடைய திருமண வாழ்க்கை வெற்றிகரமாக போய்க் கொண்டிருந்திருக்கும். இதற்கு மேலும் என் திருமண முறிவு பற்றி பேச விரும்பவில்லை. அதில் பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், தேவையில்லாமல் அவர்களை இதில் இழுக்க நான் விரும்பவில்லை,” எனச் சொல்லியிருக்கிறார் த்ரிஷா.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions