போட்டி நடிகைகளிடம் நட்பு வளர்க்கும் த்ரிஷா!

Bookmark and Share

போட்டி நடிகைகளிடம் நட்பு வளர்க்கும் த்ரிஷா!

திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டபோதும், த்ரிஷாவின் கலைப்பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தற்போது தமிழில் அப்பாடக்கர், போகி மற்றும் தெலுங்கில் லயன் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்.

அதேசமயம், முன்பு தொழில் போட்டியில் சக நடிகைகளிடம் ஹலோ மட்டுமே சொல்வதோடு நிறுத்திக்கொண்டு வந்த த்ரிஷா, இப்போது யாராக இருந்தாலும் ஜாலியாக பேசுகிறார்.

முக்கியமாக அப்பாடக்கர் படத்தில் அஞ்சலியுடன் இணைந்து நடித்த அவர், அவரிடம் படப்பிடிப்பு தளத்தில் மனம் விட்டு பேசினாராம். அதோடு, நயன்தாராவுடன் பட விழாக்களில் சந்திக்கும்போது மட்டுமே பேச்சுவார்த்தை வைத்துக்கொண்ட த்ரிஷா, இப்போதெல்லாம் அவரிடம் நீண்ட நேரம் பேசுகிறாராம்.

அப்போது அவர்களின் ஆருயிர் தோழன் ஆர்யாவும் அங்கே வந்தால் அவர்களின் பேச்சு செம அரட்டையாகி விடுகிறதாம். ஆக, தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்கிற நிலை ஏற்பட்டபிறகு போட்டி நடிகைகளிடம்கூட நட்பு வளர்த்து வருகிறார் த்ரிஷா.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions