ஆச்சரியமூட்டும் த்ரிஷா!

Bookmark and Share

ஆச்சரியமூட்டும் த்ரிஷா!

வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு இருந்த நட்பு, காதலாகிக் கசிந்து, திருமண நிச்சயதார்த்தம் வரை போய் திடுதிப்பென திருமணம் நின்று விட்டது. சினிமாக் கதைகளில் வரும் பிரேக்-அப் போல ஆகிவிட்டது இதுபலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தி விட்டது.

இதற்கு முன்பு பிரபுதேவா-நயன்தாரா, சிம்பு- ஹன்சிகா என்று பல காதல் முறிவுகளைப் பார்த்திருந்தாலும் த்ரிஷா முறிவை பலராலும் ஜீரணிக்க முடியவில்லை. ஏனெனில் நீண்டகாலமாக நடித்து வந்தாலும் இப்படி கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்தவர் த்ரிஷா திருமணம் பற்றி பிடி கொடுக்காமலேயே இருந்து வந்தவர்.

பலரும் இதுபற்றிக் கவலையும் பரிதாபமும் பட்டாலும் த்ரிஷா வாழ்வில் எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த சோதனையையும் முடிவையும் எதிர்கொள்ள வேண்டும் என்று மாறியிருக்கிறார். இதை சகஜமாக ப்ராக்டிகலாக எடுத்துக் கொண்டு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருவது மேலும் ஆச்சரிய மூட்டுகிறதாம்.

இப்போது கமலின் தூங்காவனம், சுந்தர்.சியின் அரண்மனை-2 உள்ளிட்ட புதியபடங்களில் நடிப்பதில் மூழ்கிவிட்டார். நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை என்று தத்துவம் வேறு பேசுகிறாராம். இதைத்தான் உடனிருப்போரால் தாங்கிக் கொள்ள முடியவில்லையாம்.

இவ்வளவு முதிர்ச்சியாக பக்குவமாக இருக்கிறாரே என்று சாதாரணமாக இருப்பதா, எல்லா சோகத்தையும் மறைத்துக் கொண்டு எப்படி இப்படி இருக்கிறார் என்று வியப்பதா என்று குழம்புகிறார்கள்.

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions