அப்போ ஜெஸ்ஸி, இப்போ ஹேமானிகா... கண்ணுக்குள்ளேயே நிக்குறீங்களே திரிஷா!

Bookmark and Share

அப்போ ஜெஸ்ஸி, இப்போ ஹேமானிகா... கண்ணுக்குள்ளேயே நிக்குறீங்களே திரிஷா!

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் அழகும், நடிப்பும் அபாரம் என அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். கௌதம்மேனனின் இயக்கத்தில் அஜீத் நாயகனாக நடித்துள்ள ‘என்னை அறிந்தால்' இன்று ரிலீசாகியுள்ளது.

இப்படத்தில் திரிஷா, அனுஷ்கா என அஜீத்திற்கு இரண்டு நாயகிகள். திரிஷாவின் கதாபாத்திரப் பெயர் ஹேமானிகா. அனுஷ்காவின் பெயர் தேன்மொழி. இப்படத்தில் நடனக் கலைஞராக திரிஷா நடித்திருக்கிறார்.

முன்னதாக வெளியான இப்பட போஸ்டர்களிலேயே திரிஷாவின் அழகு அள்ளியது. இந்நிலையில், இன்று படத்தைப் பார்த்து விட்டு அவரது ரசிகர்கள் ஆஹா, ஓஹோ என திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தில் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

ராஜேஷ் என்ற ரசிகர், ‘ஹேமானிகா கதாபாத்திரம் அருமை... மழை வரப் போகுதே... இடைவேளையின் போது நான் அழுதே விட்டேன்...' எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், மற்றொரு ரசிகர், ‘ஹேமானிகா அற்புதமான கதாபாத்திரம். இப்படத்தின் முடிசூடா ராணி' எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

'நேற்று ஜெஸ்ஸி, இன்று ஹேமானிகா, நாளை... இதைப் போன்றே மேலும் பல நல்ல கதாபாத்திரங்களில் திரிஷா நடிக்க வேண்டும் எனப் பல ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விண்ணைத் தாண்டிய வருவாயாவிற்குப் பிறகு, இப்படத்தில் சத்தியதேவ் - ஹேமானிகா ஜோடி நெஞ்சத்திலேயே நிற்பதாகவும், திரிஷாவின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும், ஹேமானிகா என்ற அற்புதமான கதாபாத்திரத்தை திரிஷாவிற்குக் கொடுத்த கௌதம்மேனனுக்கும் திரிஷா ரசிகர்கள் தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். மழை வரப் போகுதே பாடல் காட்சிகள் அருமையாக படமாக்கப் பட்டுள்ளதாக பாராட்டியுள்ளனர்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions