தெலுங்கிலும் திகில் நாயகி ஆன த்ரிஷா

Bookmark and Share

தெலுங்கிலும் திகில் நாயகி ஆன த்ரிஷா

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா நேற்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நடிகை த்ரிஷாவிற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தெலுங்கு திரை உலகில் லவ் யு பங்காரம்  எனும் வெற்றிப் படம்  இயக்கிய இயக்குநர் கோபியின் அடுத்த படத்தில் நடிகை த்ரிஷா  கதாநாயகியாக  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திகில் திரைப்படமான இப்படத்திற்கு நாயகி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

லக்ஷ்மி ராவே மா இன்டிகி எனும் வெற்றிப் படத்தை தெரிவித்த மமிடிபள்ளி கிரிதர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். தமிழில், அரண்மனை இரண்டாம் பாகத்தில் த்ரிஷா நடிக்க உள்ள நிலையில் இப்போது தெலுங்கில் உருவாகும் திகில் படத்திலும் த்ரிஷா கமிட்டாகியுள்ளார்.

ஆக திகில் நாயகியாகியுள்ளார் த்ரிஷா. தெலுங்கில், நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ள லயன் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions