பொருத்தமான மாப்பிள்ளையை விரைவில் தேர்வு செய்வேன்: திரிஷா

Bookmark and Share

பொருத்தமான மாப்பிள்ளையை விரைவில் தேர்வு செய்வேன்: திரிஷா

திரிஷாவுக்கும் சினிமா தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் நடப்பதாக இருந்த திருமணம் ரத்தாகி விட்டது. இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து திருமண ஏற்பாடுகளை கவனித்தபோது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். பிரிவுக்கான காரணத்தை இருவரும் சொல்லவில்லை.

இந்த விவகாரத்தில் நிறைய பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்றும் அவர்களது பெயரை வெளியிட்டு புண்படுத்த விரும்பவில்லை என்றும் திரிஷா கூறி இருந்தார். தற்போது மேலும் திருமண முறிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:– எனது திருமணத்தை குடும்பத்தினர்தான் நிச்சயம் செய்தனர். நானும் சம்மதித்தேன். எல்லா ஏற்பாடுகளையும் பெற்றோரே செய்தனர்.

திருமணத்துக்காக சில விதிமுறைகளும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. அவை ஏற்புடையதாக இல்லை. எனவேதான் திருமணத்தை நாங்கள் ரத்து செய்தோம்.

இதுபோன்று நடப்பது என்பது பொதுவான விஷயம் தான். எனக்கு திருமணத்தில் நம்பிக்கை உள்ளது. நமது பண்பாடு கலாச்சாரத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. நான் நடிகையாக இருக் றேன். எனக்கு எது தேவை என்பது குடும்பத்தினருக்கு தெரியும். எனக்கு பொருத்தமான மாப்பிள்ளைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை நிச்சயம் தேர்வு செய்வேன்.

இவ்வாறு திரிஷா கூறினார்.

திரிஷா தற்போது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். ஜெயம் ரவியுடன் நடித்த ‘பூலோகம்’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மீண்டும் ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’ படத்தில் நடித்துள்ளார். கமலுடன் ‘தூங்காவனம்’ படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். ‘அரண்மனை 2–ம் பாகம்’ பேய் படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions